நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

You are currently viewing நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடலில் நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து மாலை கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் மரணமான மாணவனின் உடல் மீட்கப்பட்ட பகுதி ஆழமான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உடனடியாக ஆழமான பகுதி என அறிவித்தல் பலகை ஒன்றினை நிர்மாணிக்கவுள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments