நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்!

நல்லுார் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பம்!

ஈழத்தில் வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயபூர்வமாக கொடிச்சீலை உபயகாரரிடம் காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(16) காலை இடம்பெற்றது. 

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் ஆலயத்தின் உட்புறத்தில் பந்தற்கால் நாட்டுதல் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சி நிகழ்வு இடம்பெற்றது. 

ஆலயத்தில் இருந்து மாட்டுவண்டில் மூலம் காளாஞ்சி எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கொடிசீலை உபயகாரரிடம் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் .ஆரம்பமாகவுள்ளது. 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments