நல்லூரில் 2வது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப்போராட்டம்!

நல்லூரில் 2வது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப்போராட்டம்!

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று முன்தினம் ஆரம்பித்தார்
அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் இணைந்து, வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை நேற்று காலை முன்னெடுத்தனர். அதன் பின்னர் மேலும் பலர் அவர்களுடன் போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்

பகிர்ந்துகொள்ள