நாகர் கோவில் மாணவர் படுகொலை அடக்குமுறைக்கு மத்தியில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது!

நாகர் கோவில் மாணவர் படுகொலை அடக்குமுறைக்கு மத்தியில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது!

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பாடசாலை மாணவர்கள் மீது 1995ம் ஆண்டு இதே நாளில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 மாணவர்கள் உட்ப்பட 23 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் பகுதியில் படைத்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பாடசாலை அதிபர் தீவிர விசாரணைக்கும் அறிவுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

இதேவேளை நினைவேந்தலில் பங்கேற்க மாணவர்கள் ஐம்பது பேருக்கு மாத்திரமே பொலிஸார் அனுமதி வழங்கியிருப்பதாக தெரியவருகிறது.

நிகழ்வில் மக்களோ, செய்தியாளர்களோ பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள