நாங்கள் சிறீலங்கனல்ல தமிழர்!

நாங்கள் சிறீலங்கனல்ல தமிழர்!

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கெதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று யாழில் ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக கட்சியின் தலைவர்,செயலாளர் மற்றும் மகளிர்பிரிவு தலைவி உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டர்.

சிறீலங்கா காவல்த்துறையின் மிரட்டலுக்கு அடிபணியாது போராட்டம் நடத்துவது எமது உரிமை என தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் கூறியும் கேட்காத காவல்த்துறை தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாங்கள் எல்லாம் சிறீலங்கன் ஏன் இந்தப்போராட்டம் என காவல்த்துறை கேட்டதற்கு நாங்கள் சிறீலங்கன் அல்ல தமிழர் என கட்சியின் செயலாளர் கஜேந்திரன் அவர்கள் பதிலளித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள