நாடாளுமன்ற உறுப்பினர் வினோதன் மீது தாக்குதல்!!

நாடாளுமன்ற உறுப்பினர் வினோதன் மீது தாக்குதல்!!

வவுனியா – கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் நேற்றிரவு 7.00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளது.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வந்தபோது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவொன்று அவரின் வாகனத்தை வழிமறித்துள்ளது.

அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் கிழே இறங்கி இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில், அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனை

அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமையினையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரை ஏற்றிக்கொண்டு வாகனம் வவுனியா காவல் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதி பூவரசங்குளம் காவல்த்துறை பிரிவு என்பதனால் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த பூவரசங்குளம் காவல்த்துறை சம்பவம் இடம்பெற்ற இடத்தின் சிசிரிவி காணொளி உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments