நாடுகளை தொடராக அச்சுறுத்தம் நிலநடுக்கம்!

You are currently viewing நாடுகளை தொடராக அச்சுறுத்தம் நிலநடுக்கம்!

எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இஸ்மாயிலியா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரை மட்டத்திலிருந்து 5.47 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்ட போதிலும், உயிர்ச் சேதமோ சொத்துச் சேதமோ எதுவும் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனை தொடர்ந்து

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில்  (03) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி மாகாணத்தில் உள்ள ரோல்பா மாவட்டத்தின் இரிவாங் கிராமப்புற பகுதியில் அதிகாலை 3.07 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது.

சல்யான், ருகும் மற்றும் பியூதன் மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. எனினும் அதிகாலை வேளையில் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வு மக்களிடையே சிறிது அச்சத்தை ஏற்படுத்தியது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply