நாடு தழுவிய பொது முடக்கம்; முற்றாக முடங்கியது வவுனியா!

You are currently viewing நாடு தழுவிய பொது முடக்கம்; முற்றாக முடங்கியது வவுனியா!

நாடாளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் செல்வோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தது.

இதேவேளை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமையால் மரக்கறி வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம் கொடுத்துள்ளதுடன், மரக்கறி வகைகள் பழுதடையும் நிலையம் ஏற்ப்பட்டுள்ளது.

இதேவேளை

வடக்கு மாகாணத்தில் மேலும் 114 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 687 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments