நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அறக்கட்டளை – வன்னியில் பெண் தலைமைக் குடும்பங்களுக்கு உதவிகள்!

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அறக்கட்டளை – வன்னியில் பெண் தலைமைக் குடும்பங்களுக்கு உதவிகள்!

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி  ஒர்  இனத்தின் அடையாளம். ஊடகம் எனபதை நெஞ்சில் நிறுத்தி இறுதிவரை வாழ்ந்த தலை சிறந்த ஊடகவியலாளன்.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு. சத்தியமூர்த்தி அவர்களின் அறக்கட்டளையின் ஊடாக சென்ற வருடம் கிணறு ஒன்று வன்னியில் கட்டிக் கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு காலத்தின் தேவை கருதி வன்னியில் தேவிபுரம் மற்றும் மாங்குளம் பகுதிகளில் பெண் தலைமைத்துவம் கொண்ட 45 குடும்பங்களுக்கு ஒருலட்சம் ரூபாய் பெறுமதியில் 10 கிலோ அரிசி, 5 கிலோ மா, 2 கிலோ சீனி , தேயிலை, சோயாமிற் போன்ற அத்தியாவசிய பொருட்களை சிந்து சத்தியமூர்த்தி அவர்கள் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தின் மூலம்  தனது பிறந்தநாள் அன்று வழங்கிவைத்துள்ளார்.

இவரின் இந்தச் செயல் மற்றவர்களையும் சிந்தித்து செயலாற்ற வைக்கும் என நம்புகிறோம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments