நாயாறு கடலில் மூழ்கியவர் சடலமாக மீட்பு!!

நாயாறு கடலில் மூழ்கியவர் சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட நாயாற்று கடல்நீரேரியில் நீராடியபோது நீரில் மூழ்கி காணாமல் போனவரின் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனக்கருதப்படும் நண்பர்கள் இணைந்து நாயாற்றில் நீராடியபோதே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கடற்படையினரும் மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பகிர்ந்துகொள்ள