நாற்பது பேருந்துகளில் இரவு வேளையில் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட இனவழிப்பு படைகள்!

நாற்பது பேருந்துகளில் இரவு வேளையில் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட இனவழிப்பு படைகள்!

வவுனியா மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகட்டு ஆகிய இராணுவ தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு நேற்றைய தினம் 276 கடற்படை உத்தியோகத்தர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 500 இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமினை சுத்தப்படுத்துவதற்காக குறித்த முகாமிலிருந்து வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 174 கடற்படை உத்தியோகத்தர்களும், பெரியகட்டில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 102 கடற்படை உத்தியோகத்தர்களும் 40 இற்கும் மேற்பட்ட பேருந்துகளில் நேற்று இரவு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments