நாளை முதல் தளர்வுகள் ; மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!

நாளை முதல் தளர்வுகள் ; மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!

ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளுப்பட்டுள்ள நிலையில் மெல்ல மெல்ல சென்னையில் மீண்டும் இயல்பு நிலை திரும்புகிறது. பெரும்பாலான கடைகளை திறப்பதற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு தளர்வு அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டதால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக சென்னையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது இந்த நிலையில். கடந்த வாரம் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அறிவித்திருந்தது.

குறிப்பாக தனிக்கடைகள் இயங்க அனுமதித்திருந்தது. இருப்பினும் கூட மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

சிகையலங்கார கடைகள், அழகு நிலையங்கள், வளாக கடைகள் மற்றும் பேரங்காடிகள் தவிர்த்து பெரும்பாலான கடைகளை திறப்பதற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு தளர்வு அளித்துள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் சென்னையில் பெரும்பாலான கடைகள் தனியார் நிறுவனங்கள் செயல்பட உள்ளன.

இதனை அடுத்து தற்போது கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்டது சாலைகள் கடைத்தெருக்கள், உள்ளிட்டவை தற்போது மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இது நாளை மேலும் அதிகரிக்கும் எனவும் சென்னை மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments