நாவாந்துறை சுற்றிவளைப்பில் 14 பேர் கைது!!

நாவாந்துறை சுற்றிவளைப்பில் 14 பேர் கைது!!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் காவல்த்துறையினரும் இணைந்து நேற்று காலை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், யானை தந்தம், வாள், ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் நேற்று காலை திடீரென இராணுவத்தினரும் காவல்த்துறையினரும் இணைந்து பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் யானை தந்தம் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரும் கூரிய வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவருமாக நேற்றைய சுற்றிவளைப்பில் மொத்தமாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments