நித்திரையில் இருந்த இரு பிள்ளைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை!

நித்திரையில் இருந்த இரு பிள்ளைகளை கிணற்றில் தூக்கி வீசி கொலை!

தந்தையார் ஒருவர் நித்திரையிலிருந்த தனது 10 வயது சிறுவன் மற்றும் 7 வயது சிறுமி ஆகிய இரு பிள்ளைகளையும் கிணற்றில் தூக்கி வீசியதில் இரு பிள்ளைகளும் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலையில் இடம் பெற்றள்ளதாகவும் தந்தையாரை கைது செய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடி மாவடிச்சேனை பாடசாலை பின் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியான அஷிமுல் ஷஹியா 10 வயது சிறுவனான அஷிமுல் ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள