நியூசிலாந்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொரோனா பாதிப்பு!

நியூசிலாந்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள  கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பில்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூசிலாந்தில் புதிதாக இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நியூசிலாந்தில் புதிய நோய்த்தொற்றுகள் இல்லாத 24 நாள் ஓட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான இருவரும், இறக்கும் நிலையிலிருக்கும் பெற்றோரைப் பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, பிருத்தானியாவிலிருந்து பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆவர்.

கடந்த வாரம் நியூசிலாந்து நாடு, தன்னை கொரோனா வைரஸ் இல்லாத நாடு என்று அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து உள்நாட்டு கட்டுப்பாடுகளையும் நீக்கியது. இருப்பினும், கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. குடிமக்கள் மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக தகவல்: BBC

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments