நியூயார்க் ; நாயை கட்டி வைக்குமாறு சொன்ன கறுப்பினத்தவர் மீது புகார்!

நியூயார்க் ; நாயை கட்டி வைக்குமாறு சொன்ன கறுப்பினத்தவர் மீது புகார்!

அமெரிக்காவின் நியூயார்க் பூங்காவில் உலவும்போது நாயை கட்டி வைக்குமாறு கூறிய கறுப்பினத்தவருக்கு எதிராக காவல்துறையில் புகார் செய்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்!

நியூயார்க்கில் பூங்காவிற்கு செல்லப்பிராணிகளை அழைத்து வரும் உரிமையாளர்கள் அவற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சங்கிலியால் பிணைத்து வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பெண் அவ்வாறு செய்யவில்லை என்பதை ஒரு கறுப்பின நபர் சுட்டிக்காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தனக்கு ஒரு கறுப்பின நபரால் அச்சுறுத்தல் இருப்பதாகப் புகாரளித்தார்.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அந்தப் பெண்ணை அவர் பணிபுரிந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments