நியூயோர்க்கில் குளிரூட்டப்பட்ட பாரவூர்திகளில் ஏற்றப்படும் உடலங்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

நியூயோர்க்கில் குளிரூட்டப்பட்ட பாரவூர்திகளில் ஏற்றப்படும் உடலங்கள்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நியூயோர்க் நகரில், பலியானவர்களின் உடல்கள் குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் ஏற்றப்படும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட ஒருவரால் பதிவுசெய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்ட இக்காணொளியில், நியூயோர்க் நகரத்தின் “Brooklyn” மருத்துவமனையில் மரணமானவர்களின் உடலங்கள், தொழிற்சாலைகளில் பாவிக்கப்படும் பாரம் தூக்கிகள் மூலம் குளிரூட்டப்பட்ட பாரவூர்தியொன்றில் ஏற்றப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மேற்படி காணொளியானது உண்மையானதேயென உறுதிப்படுத்தும் “Brooklyn” மருத்துவமனையின் பேச்சாளரான, “Eileen Tynion”, எனினும் இக்காணொளி இணையத்தில் பகிரப்பட்டமை துரதிர்ஷ்டவசமானது எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “கொரோனா” வைரசுக்கெதிரான மருந்து விரைவில் தயாரிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான “Johnson & Jonhson” ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளதாகவும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மருந்துக்குடுவைகள் தயாரிப்பதற்கான பூர்வாங்க வேலைப்பாடுகள் தொடங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் இருவாரா காலங்களுக்குள் மிக அதிகமானவர்கள் “கொரோனா” தொற்றுதலுக்கு ஆளாகலாமெனவும், அதிகபட்சமாக இரண்டு இலட்சம் பேர் வரையில் மரமாகலாமெனவும் தான் எதிர்பார்ப்பதாக, அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவரான “Dr. Anthony Fauci” தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்க கடற்படையின் மிதக்கும் வைத்தியசாலை கப்பலான “USNS Comfort” நியூயோர்க் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும், 1000 படுக்கைகளை கொண்ட இக்கப்பல், கொரோனாவால் பாதிக்கப்படாத, நகரத்தின் ஏனைய நோயாளிகளை கவனித்துக்கொள்ளுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments