நிரந்தரமாகும் ஓமந்தை சிறீலங்கா இராணுவச்சாவடி!

நிரந்தரமாகும் ஓமந்தை சிறீலங்கா இராணுவச்சாவடி!

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக இராணுவ சோதனைச்சாவடி நிரந்தரமாக மாற்றப்பட்டுவருகின்றது.

கடந்த வருடம் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் மக்களை கண்காணிக்கும் வகையில் வவுனியாமாவட்டத்தின் ஓமந்தை உட்படபல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது,

குறித்த சோதனை சாவடி அமைக்கப்பட்டு ஒருவருடம் கடக்கின்ற நிலையில் நிரந்தரமான சாவடியாக அதனை உருவாக்கும் செயற்பாடுகள் கடந்தசிலதினங்களாக இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியை அண்டிய கரையில் சீமேந்திலான தளம் அமைக்கப்பட்டு,இரண்டு நிரந்தரகொட்டகைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது

பகிர்ந்துகொள்ள