நிறுத்தடா உன் துதிப்பாடலை!!

நிறுத்தடா உன் துதிப்பாடலை!!

ஒரு தமிழ்ப்பெண்
மனவிரக்தியில்
தன் பிள்ளையை
அடித்துவிட்டாள்
என்ற குற்றத்திற்காக
கைதுசெய்யப்பட்டுவிட்டாள்!
இதுதான் செய்தி
இதைவிடுத்து
சிறீலங்கா காவல்த்துறையினர்
காப்பாற்றிவிட்டனெர
மனிதாபிமான பட்டம்
சூட்டும்
என் இனத்தினரே!

கொஞ்சம் நில்லுங்கள்!

கொத்துக்கொத்தாக
எம்மினக்குழந்தைகளை
முள்ளிவாய்காலில்
மூச்சடக்கியதை
மறந்து போனீர்களா?

தாய் இறந்தது தெரியாது
பசியால் முலைப்பாலை
அருந்தியதைக் கண்டு
உயிர் வலியில் துவண்டது
நினைவிலில்லையா?

கொதிக்கும் எண்ணைச்
சட்டியுக்குள்
குழந்தைகளை
பொரித்து சதுராடியதையும்
மட்டக்களப்பில்
சிறுவர்களை
உயிரோடு கட்டித்தூக்கியதையும்
கடந்து போனீர்களா?

வெள்ளைச்சீருடைகளை நாகர்கோவிலிலும் செஞ்சோலையிலும் நரபலியெடுத்து

இரும்புப்பறவைகள் கொத்திக்கிழித்ததை இதயம் இரைமீட்க்கவில்லையா?

இனப்படுகொலை செய்து
விட்டு
மனிதநேய முகத்தை நீட்ட
முனையும் காடையருக்கு
வாழ்த்துப்போடுவதையும்
போற்றிப்பாடுவதையும்
மானமுள்ள தமிழனென்றால் நிறுத்து!
கருத்தியலில் கூனலென்றால் அதையும்
நிமிர்த்து!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள