நிலச்சரிவு அனர்த்தத்தில் முதல் உயிரிழப்பு அறிவிப்பு!

You are currently viewing நிலச்சரிவு அனர்த்தத்தில் முதல் உயிரிழப்பு அறிவிப்பு!

நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் மீட்ப்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்தவண்ணமுள்ள நிலையில், முதல் உயிரிழப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மீட்புப்பணியாளர்களின் தேடுதலில் இடிபாடுகளில் சிக்கி அல்லது நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

எனினும், உயிரிழந்தவர் பற்றிய மேலதிக தகவல்களை வழங்க மறுத்துள்ள காவல்துறை, உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு தகவல் வழங்குவதில் பொறுமை காப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள