நில அளவை திணைக்களத்தால் எல்லையிடும் பணி அதிகாரி – மக்கள் இடையே முறுகல்!

நில அளவை திணைக்களத்தால் எல்லையிடும் பணி அதிகாரி – மக்கள் இடையே முறுகல்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட தண்டுவான் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில், இன்று (17) நில அளவைத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லைப்படுத்தும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்​பு தெரிவித்துள்ளனர்.

நில அளவைத் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளின் அனுமதியைப் பெற்று, புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட உடையார்கட்டு, கோம்பாவில், ஒதியமலை, மேழிவனம் ஆகிய கிராமங்கள் உள்ள மக்களின் காணிகளை எல்லைப்படுத்தியுள்ளது.

இதையடுத்த, சம்பவ இடத்துக்கு விரைந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம், நாளை (18) எழுத்துமூலம் முறையிடவுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். இதன்போது, தானும் வருவதாக, நில அளவைத் திணைக்கள அதிகாரி தெரிவித்ததை அடுத்து, மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments