நீங்கள் சந்தர்ப்பவாதிகள்! சாடிய ஜேர்மன் அரசு! வாய் மூடிய தமிழர் தரப்பு!

நீங்கள் சந்தர்ப்பவாதிகள்! சாடிய ஜேர்மன் அரசு! வாய் மூடிய தமிழர் தரப்பு!

🔴அகதித்தஞ்சம் கோரி யேர்மனியில் பதிவுசெய்தவர்களில் பலருக்கு “நீலப்புத்தகம்” என்கிற Travel document கொடுக்கப்படும். (இதில் இலங்கைக்குப் பயணிக்கவியலாது). 2009 இற்குப் பிறகு இங்கு வந்து, அகதித்தஞ்சம் அனுமதிக்கப்பட்டு “நீலப்புத்தகம்” வழங்கப்பட்ட நிலையில், அதை மாற்றி இலங்கைக் கடவுச்சீட்டில் வதிவிட அனுமதிப்பத்திரம் தருமாறு கேட்டு, பின்னர் இலங்கைக்கும் சென்று வந்துவிட்டார்கள் பலர்.அவர்களது நிபந்தனைகளின் படி;

🔴(1). இலங்கையில் உயிர்வாழ்வதற்குரிய தகுந்த சூழல் இல்லையெனத் தஞ்சம் புகுந்து, வதிவிட அனுமதி பெற்று, மீளவும் அதை இலங்கைக் கடவுச்சீட்டுக்கு மாற்றிக்கொண்டு, விடுமுறைக்கு இலங்கை செல்கிறார்களெனின், அவர்களது ஆரம்ப வாக்குமூலம் பொய்யானதா ?

🔴(2.) 2009 இன் பின்னர் இலங்கையில் உயிர் வாழ முடியாதென்று இங்கு வந்தவர்களில், 60 வீதமானோர் இலங்கை சென்று வந்திருக்கிறார்கள். இதன்போது அவர்களுக்கு அங்கே உயிரச்சுறுத்தல் இல்லையா ?

🔴(3)யேர்மனியின் குடியுரிமை பெற்றநபர் இலங்கை செல்லும்போது , ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் அவர்கள் இலங்கையிலுள்ள யேர்மனியத் தூதுவராலயத்தில் பதிவுசெய்யமுடியும். ஆனால் இலங்கைக் கடவுச்சீட்டில் யேர்மனிய வதிவிட அனுமதி பெற்றவர் இலங்கை செல்லும்போது ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்படின் அவர் இலங்கையராகவே கணிக்கப்படுவார், அது தெரிந்தும் அச்சமின்றிப் பயணிப்பதன் பொருள் என்ன ?

இன்று சட்டவாளர்கள் சிலருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளே இவை. இவற்றில் எந்தக்கேள்விக்கும் பதிலளிக்க இயலவில்லை. நம்மில் சிலரது “சுயநலப்போக்குகள்” யேர்மனிய அரசால் நன்கு அவதானிக்கப்படுகிறது.இன்று அப்பாவித் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டதில் இவ்வாறான காரணங்களும் அடங்கும்.

🔴புலத்தில் ஈழ சார்பு ஆர்ப்பாடங்களுக்கு அதிகம் வராத பங்களிப்பு செய்யாத இவர்களே அடிக்கடி சொல்லு ஒரே வார்த்தை,நாங்கள் ஊருக்கு போகவேண்டும்.அதனால்தான் ஆர்ப்பாட்டங்கள் ஒன்றுகூடல்களுக்கு வருவதில்லை என்று,கடைசியில் அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் இவர்களினால் இந்த இனம் பாடு ஒன்று இரண்டல்ல..

யாழ்ப்பாண வீதிகளில் சென்று பார்த்தால் தெரியும்,அவரவர் தனிதனிய இது தன்னுடைய வீதி என்ற நினைப்பில் வாகனங்களை ஓட்டி செல்லுவார்கள், எல்லோருக்கும் அவசரம்,பத்து ரூபாவை இருபது ரூபா ஆக்குவதற்கு…பல்லாயிரம் பேர்களை கொன்ற விடுதலை போராட்டத்தை அடகு வைத்து அகதி அந்தஸ்து கோரிக்கை, பின்னர் ஊருக்கும் அடிக்கடி போய் படம் காட்டவேண்டும் என்று இறங்கி இப்போது தேரை இழுத்து தெருவில் விட்டுள்ளனர்.

தமிழ் இனத்திற்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் உள்ளே இருந்து செய்து விட்டு பழியை இவர்கள் தூக்கி சிங்கள அரசிலும் வெளிநாடுகளில் போடும் வேகம் இருக்கே,அப்பப்பா…அந்த நடிப்புக்கு நாற்பது ஒஸ்கார் கொடுக்கலாம்…ஏதோ நீங்களாச்சு நல்லா இருங்கடா…எல்லாம் ஒரு சாண் வயித்துக்கும் ஒரு வீடு வாகன வசதி என்று பக்கத்து வீட்டு சகதமிழனுக்கு படம் காட்டதானே காசு காசு என்று அடுத்த தமிழனை அடகு வைத்து முதுகில் ஏறி திரைகடல் ஓடி திரிகிறீர்கள்..

🔴நீங்களும் உங்கள் இனமும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவும் உய்ய முடியாமல் இருப்பதற்கு இன்னும் எத்தனை காலம் அடுத்தவர்களுக்கு கை காட்டி கொண்டு இருக்க போகிறீர்கள்! உங்களுக்கென…முள்ளிவாய்க்காலையே கண்டுகாணாமல் இருப்பவர்கள்தானே..

இன்னும் சொல்லப்போனால் சிறீலங்கா சுற்றுப்பயணத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாது சிங்களப்பகுதிகளுக்கு சென்று அவர்கள் விடுதிகளிலும் சுற்றுலாத்தளங்களிலும் உணவகங்களிலும் களித்து மகிழும் சுரணைகெட்ட தமிழர்தானே நாங்கள்

இந்த இழிநிலை இருக்கும் வரை அடுத்தவனை குறை சொல்லி என்ன பயன்?????

குறிப்பு:இது ஜேர்மனியத் தமிழருக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த அனைவருக்கும் பொருந்தும்.

பகிர்ந்துகொள்ள