நீங்கியது தடை – இருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறலாம்!!

You are currently viewing நீங்கியது தடை – இருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறலாம்!!

சிறீலங்காவில் கடந்த 3 வாரங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று அதிகாலையுடன் தளர்த்தப்பட்டுள்ளன. எனினும் தளர்வுகளின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆலோசனை வழிகாட்டல்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய சுகாதார ஆலோசனை வழிகாட்டல்கள் வீடுகளிலிருந்து அத்தியாவசிய சேவை நிமித்தம் இருவர் மாத்திரமே வெளிச்செல்ல முடியும். முச்சக்கரவண்டிகள் உள்ளிட்டவை செல்ல அனுமதி வழங்ப்பட்டுள்ளதோடு , அவற்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்.

மாவட்டங்களில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீடிக்கப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம்.

அத்தோடு சகல சந்தர்ப்பங்களிலும் அடிப்படை சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலிருக்கும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments