நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் பிரதாபன் இலண்டனில் சாவெய்தினார்!

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் பிரதாபன் இலண்டனில் சாவெய்தினார்!

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளரும், செயற்பாட்டாளருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனா கொல்லுயிரியால் காவுகொள்ளப்பட்டார்.

பிரித்தானியாவில் நீண்ட காலமாக வசித்து வரும் தமிழ்த் தேசியப் பற்றாளர் பிரதாபன் அவர்கள் தேச விடுதலைப் பணிகளுக்குத் தனது ஆதரவைத் தொடர்ச்சியாக வழங்கி வந்ததோடு, தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் இளைய தலைமுறையினரின் கல்வி வளர்ச்சி மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டில் அக்கறை காட்டிப் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தவர்.

கொரோனா கொல்லுயிரியால் பாதிக்கப்பட்டுக் கடந்து மூன்று வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு பிரதாபன் அவர்களின் உயிர் 02.05.2020 சனிக்கிழமை பிரிந்தது.

மென்மையான, பண்பு மிக்க ஒரு தமிழ்த் தேசியப் பற்றாளனின் பிரிவு இவரது குடும்பத்தினரை மட்டுமன்றி இவரோடு பணிபுரிந்த செயற்பாட்டாளர்கள் – தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது தேசப் பணிக்கு மதிப்பளித்து தமிழ்முரசம் வானொலி தலைசாய்த்து நிற்பதோடு, அவரது குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்கின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments