நீதிமன்ற உத்தரவினையும் மீறி பௌத்த துறவி பெயர் பலகை நாட்டல்!

நீதிமன்ற உத்தரவினையும் மீறி பௌத்த துறவி பெயர் பலகை நாட்டல்!

செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி பௌத்த விகாரை அமைத்து சர்சையினை ஏற்படுத்திய இடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக எவரும் எந்த அபிவிருத்தி பணியும் முன்னெடுக்கக்கூடாது என்றுஉத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்

தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிதாக அங்குள்ள பௌத்த துறவி இரஜமகாராம விகரை என்ற பெயர்பலகையினை சீமேந்து கலவை போட்டு அமைத்துள்ளதுடன் தண்ணீர் தொட்டிவைப்பதற்காக  கொங்கிறீட் பொட்டு நிலையான தூணினை அமைத்துள்ளமை தொடர்பில் நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் 21.09.2020 அன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.


பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வோ நேர்த்திக்கடனோ செய்வதற்கு பொலீசார் படையினர் பல்வேறு தடைகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவினையம் மீறி பௌத்த துறவியின் செயற்பாட்டினை பொலீசார் கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள