நீராவியடி வருடாந்தப் பொங்கல் விழா!

நீராவியடி வருடாந்தப் பொங்கல் விழா!

பொலிஸாரின் தடையைத் தகரத்து, முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வருடாந்த பொங்கல் விழா, நாளை (24) நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் இணைந்து, பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளில், இன்று (23) ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக, இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக, கோவில் நிர்வாகத்தினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதிக்கு  வந்த விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும், கோவில் சூழலில், தகரப் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடைவிதித்தனர்.

தகரப்பந்தலை கோவில் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அதை எழுத்துமூலம் அறிவிக்குமாறு கோரினர்.

இதையடுத்து, கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி பொலிஸார், அங்கிருந்து விலகிச் சென்றனர்.

பகிர்ந்துகொள்ள