புத்தளம், கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரவித்துள்ளனர்.
கற்பிட்டி சிறீலங்கா காவல்த்துறை பிரிவிற்குட்பட்ட குரகன்ஹேன பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்று பிற்பகல் படகு கவிழ்ந்துள்ளது.
அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கடற்றொழிலுக்காக பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி சிறீலங்கா காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






