நீர்த்தாங்கியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

You are currently viewing நீர்த்தாங்கியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சி – இராமநாதபுரம், மாவடி பகுதியில், இன்று நீர்த்தாங்கியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லையா சிவன் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை தர்மபுரம் சிறீலங்கா காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

விசுவமடு – றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு, இன்று காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விசுவமடு – வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான சமரகோன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விறகு வெட்டிக் கொண்டிருந்த குறித்த நபர், வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments