நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி மரணம்!

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து சிறுமி மரணம்!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட மலசலகூட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்றையதினம் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றநிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசல கூடக்குழியில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சயீவினி (வயது 6) என்ற சிறுமியே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலசல கூடத்திற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்தநிலையில் சிறுமி அதனுள் விழுந்து இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments