நீ சாகாவரம் முருகதாசா!!

You are currently viewing நீ சாகாவரம் முருகதாசா!!

இருபத்தியேழு அகவையில்
நெருப்பாகி நிமிர்ந்தான்
முருகதாசன்!

சிறீலங்காவால்
நிகழ்த்தப்படும்
தமிழின அழிப்பை
தடுத்து நிறுத்தக்கோரி
முத்துக்குமார் வழியிலே
முருகதாசனும்
நெருப்பாகிப்
பாய்ந்தான்!

மூன்றுகால்
நாற்காலி முன்
தன் இனத்திற்காக
மனிதநேய சபையிடம்
கோரிக்கைகளை முன்வைத்து
உயரிய இலட்சியத்திற்காக
உயிரையே தந்தான்!

முருக தாசா
உன் மூச்சு அடங்கிய
திடலில்
ஆண்டுதோறும்
அறப்போராட்டத்தில்
இணைகின்றோம்
உலகம் இன்னும்
ஊமைதான்!

ஆனால்

ஒருநாள்
உன் கோரிக்கைகள்
கருக்கொள்ளும்!
எந்த
சர்வதேசத்தின்
சுய அரசியல்
சிறீலங்காவுக்கு
முதுகெலும்பாக
மாறியதோ
அதே
சுய அரசியல்
எமக்கான
சுதந்திரத்தை
உருவாக்கும்
அப்போது
உன் கோரிக்கைகள்
மகுடம் சூட்டும்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள