நுரையீரல் தொற்று வைரஸ் எச்சரிக்கை – அமெரிக்கா!

நுரையீரல் தொற்று வைரஸ் எச்சரிக்கை – அமெரிக்கா!

அமெரிக்காவில் சீன கொடிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீன நகரமான வுஹாமில்(Wuham) ஒரு சந்தையில் ஒரு விலங்கிலிருந்து வந்த இந்த வைரஸ், சீனாவின் பல நகரங்களுக்கு பரவியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆறு பேர் நுரையீரல் நோயால் இறந்துவிட்டதாகவும், அதே நேரத்தில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வடமேற்கு சியாட்டில் (Seattle) நகரின் அருகிலேயே இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயதிற்குட்பட்ட நபர் ஒருவர் வுஹானில்(Wuhan) இருந்து அமெரிக்காவிற்கு பயணம் செய்திருந்தார். அவர் மோசமாக நோய்வாய்ப்படவில்லை, இருப்பினும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான், தாய்லாந்து மற்றும் தென் கொரியாவிலும் இந்த தொற்று நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒரு நபர் தனது சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதிய கொரோனா வைரஸ், காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுடன் நிமோனியா போன்ற அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றது.

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு சர்வதேச நெருக்கடி எச்சரிக்கையை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த வைரஸ் ஒரு நபரிலிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது என்றும் இது சர்வதேச அளவில் பரவக்கூடிய ஆபத்து உள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments