நெஞ்சக் கடலில் நீங்களே..

நெஞ்சக் கடலில் நீங்களே..

 

 

சமாதானம் தேடி
பறந்த புறாக்கள்

இந்திய கழுகுகளின்
கோரப்பசிக்கு

இரையாகினர்!

எமது கண்களைக்
குத்திக்கிழிக்கும்

கயமைக்கு
முதுகு சொறியும்

ஒரு வல்லாதிக்கத்தின்

வன்மம் தலைவிரித்தாடிய

இன்னொரு தீராத

வலி சுமந்த நாள்!

அகிலமெங்கும்

அடங்காத் தமிழன்

பரம்பரை வழி வந்த

பிரபா தம்பி இவன்!

சோற்றுக்கும் கையூட்டுக்கும்

கைகூப்பி தொழுது

கயவன் வீட்டில்

கை நனைக்கும்

கைங்கரன் அல்ல!

வெஞ்சமர் நடத்தி

பகைவனை வீழ்த்தி

யாழ் மண்ணை

மீள நிமிர்த்திய

முதல் தளபதி!

வீரத்தின் தளபதியாய்

விடுதலையின் பேரொளியாய்

கலையின் வித்தகனாய்

அழியா நினைவோடு

அகத்தில் வாழ்கின்றாய்

அண்ணா!

குமுறி எழும்

வங்கக்கடல்

குலைந்து போய் நிற்க

குவலயம் கண்ணீர்க் கடலில்

மூழ்கி தவிக்க

உங்கள் செயல் வீச்சு

இழந்து தவிக்கிறோம்!

முத்தான
பத்து வேங்கைகளின்
செயல்திறனின்
இயங்கு நிலை
ஓய்வானாலும்
ஓர்மத்தோடு
உரிமைக்கான குரல்
உங்களின் நினைவோடு
ஓயாது
ஒலிக்கும்!

✍தூயவன்

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த