நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா!

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா!

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மாகா நிறுவனத்தின் கீழ் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த மூவருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வவுனியா வ்டக்கு சுகாதார துறையினரால் அவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்களுடன் பழகியவர்கள் எனப் பல தரப்பினரிடமும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன் மூலம் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 56 பேரிடமும்,

ஞாயிற்றுக்கிழமை 137 பேரிடமும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் ஒரு தொகுதியினரின் பிசீஆர் அறிக்கை இன்று மாலை வெளியாகியுள்ளது. 

அதில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்படி வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments