நெடுந்தீவு கரையில் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறல்!

You are currently viewing நெடுந்தீவு கரையில் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறல்!

யாழ். நெடுந்தீவு கரையை அண்மித்த கடலில் இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி மீனபிடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் இன்று (டிச-12) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

வடமாகாண கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய இழுவைப்படகுகள் தொடர்ந்தும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்து மீனவர்கள் தரப்பில் முறையிடப்பட்டு வந்த போதிலும் அரசு தரப்பில் அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மௌனம் சாதித்தே வருகிறது.

கடற்றொழில் அமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் கூட இவ்விடயத்தில் எவ்வித நாடவடிக்கையும் வடபகுதி தமிழ் மீனவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதாற்கு எடுக்காது இருப்பது குறித்தும் மீனவர்கள் தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பகிர்ந்துகொள்ள