நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க சதியா?

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க சதியா?

யாழ்.நெடுந்தீவுக்கு நேற்றய தினம் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் பௌத்த துறவிகள் அங்குள்ள வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சிகளை செய்வதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து 

தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை 

பௌத்த சின்னமாக காண்பித்து ஈக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதியிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந்தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சி இடம்பெறுகின்றதா என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments