நெதர்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடிக் கூண்டு உணவகம்!

நெதர்லாந்தில் வாடிக்கையாளர்களுக்கு கண்ணாடிக் கூண்டு உணவகம்!

நெதர்லாந்தில் கொரோனா தொற்று அச்சத்தினால் வாடிக்கையாளர்களுக்காக கண்ணாடி கூண்டு உணவகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் வாடிக்கையாளர்களுக்காக கண்ணாடி கூண்டு உணவகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவக நிறுவனம் ஒன்று கண்ணாடியைக் கொண்டு சிறிய அளவு கூண்டு போன்ற அழகிய தோற்றத்தில் இதை தயாரித்துள்ளது. தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் 2 அல்லது 3 பேர் மட்டும் அமர்ந்து உணவு உண்ணும்படி இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. இதனால் அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்பட்டு வருகின்றன. நிறுவனங்கள் மீண்டும் பணியை தொடங்கி உள்ளன. பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனினும் வெளியில் நடமாடும்போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்று மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments