நேட்டோ உறுப்பு நாட்டுக்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் மிரட்டல்!

You are currently viewing நேட்டோ உறுப்பு நாட்டுக்கு ரஷ்யா விடுத்துள்ள கடும் மிரட்டல்!

ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட பொருட்களுடன் ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்கு செல்லும் சரக்குகளை தடுத்துள்ளதை அடுத்து, லிதுவேனியாவை ரஷ்யா மிரட்டியுள்ளது. இந்த விவகாரம் நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு தூண்டலாம் என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. லிதுவேனியாவின் இந்த போக்கு கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரும் எனவும், பதிலடி உக்கிரமாக இருக்கும் எனவும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கான நிலக்கரி, கட்டுமானப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷ்ய பகுதிக்குள் நுழையவிடாமல் லிதுவேனியா தடுத்து நிறுத்தியது.

குறிப்பிட்ட நாட்களுக்கு சரக்குகள் ரஷ்யாவை சென்றடையாமல் போனால், நாட்டின் நலன் கருதி ரஷ்யா நடவடிக்கை முன்னெடுக்கும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் லிதுவேனியா செய்து கொண்ட ஒப்பந்தங்களை மீறும் செயல் இதுவென குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், இது ரஷ்யாவை கோபமூட்டும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி முறையான தற்காப்புக்கு உடனடியாக நாட வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, எந்த வழியை பின்பற்றியாவது இந்த முடக்குதலை முறியடிப்போம் எனவும் ரஷ்ய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழலில், நேட்டோ உறுப்பு நாடான லிதுவேனியா மீதான எந்தவொரு நேரடி ரஷ்ய தாக்குதலும் நேட்டோவிற்கு எதிரான போர் நடவடிக்கையாகக் கருதப்படும் மற்றும் உலகப் போரைத் தூண்டலாம் என்றே அஞ்சப்படுகிறது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதை நாங்கள் செயல்படுத்தினோம் என்றே லிதுவேனிய வெளிவிவகார அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் லிதுவேனியா ஊடாக ஒருபோதும் ரஷ்யா சென்று சேராது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments