நோர்வேயின் உல்லாசப்பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

நோர்வேயின் உல்லாசப்பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

நோர்வேயின் பிரபலமான “Color Line” கப்பல் சேவையின் சுவீடன், டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கான பயணிகள் கப்பல் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக “Color Line” நிறுவனம் அறிவித்துள்ளது.

“கொரோனா” பரம்பலின் பின்னதாக எழுந்துள்ள பாதகமான நிலைமைகளையிட்டு இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், இம்முடிவு பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் சேவைகளுக்கு மட்டுமே பொருந்துமெனவும், வாகனங்களை ஏற்றிச்செல்வதற்கும், வழமையான சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கும் பொருந்தாதெனவும் தெரிவித்துள்ள நிறுவனம், வாகனங்களை ஏற்றிச்செல்லும் அதிவிரைவு கப்பல்களில் கொண்டுசெல்லப்படும் வாகனங்களில் பயணிப்போருக்கும் கடுமையான விதிகள் கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்படி நிறுவனத்தின் நோர்வே – ஜேர்மனி இடையில் சேவையிலீடுபடும், “Color Magic” மற்றும் “Color Fantacy” ஆகிய அதிசொகுசு பயணிகள் கப்பல்கள் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments