நோர்வேயின் பிரபலமான மலைத்தொடர் அருவிக்கிடையில் வீழ்ந்த குழந்தை!

நோர்வேயின் பிரபலமான மலைத்தொடர் அருவிக்கிடையில் வீழ்ந்த குழந்தை!

பிந்திக்கிடைத்த செய்திகளின்படி இரவு 9:30 மணியளவில் நீரருவியில் குழந்தை இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்று நீரருவியில் வீழ்ந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மாலை 4 மணிக்குப் பிற்பாடு இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு வரை தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
தேடலுக்கு ஆதரவாக அவசர சேவைகள் மீட்பு உலங்குவானூர்தி மற்றும் உயிர்காவு விமானங்கள் கைரங்கனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

Møre og Romsdal எனும் இடத்து காவல்துறையின் செயல்பாட்டு மேலாளர் Borge Amdam அவர்கள் குழந்தை தண்ணீரில் விழுந்திருப்பது காவல்துறைக்கு உறுதியாகத் தெரியும் என்றும் அந்த இடத்திலிருந்தே தங்களுக்கு செய்தி கிடைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்

நான்கு மணிக்கும் நான்கரை மணிக்கும் இடையில் செய்தியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர். கிடைக்கக்கூடிய எல்லா ஆதாரங்களுடனும் தேடுதலில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளளார்.
மேலும் உலங்கு வானூர்திகள் தங்கள் பாதையில் தேடுகின்றன படகுகள் தங்கள் பாதையில் தேடிக் கொண்டிருக்கின்றன என இத்தகவலை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் அவர் தெரிவித்துள்ளளார். அதேவேளை
18:03 மணிக்கு காவல்துறையினர் கீச்சகத்தில் இச்செய்தியை பதிவுசெய்துள்ளனர்.

உறவினர்கள் உடல்நலம் மற்றும் நகராட்சிகளின் நெருக்கடி குழு ஆகியவற்றால் கவனிக்கப்பட்டுவருகின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 4 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments