நோர்வேயின் 58 நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு!!

You are currently viewing நோர்வேயின் 58 நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பு!!

ஞாயிற்றுக்கிழமை நோர்வேயில் 370 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்யப்பட்டன. முந்தைய ஏழு நாட்களின் சராசரியை விட 23 குறைவான தொற்றுக்கள் பதிவாகி உள்ளன, அதாவது 393 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சனிக்கிழமையன்று, 262 கொரோனா தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக வார நாட்களை விட வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் குறைவான தொற்றுகள் பதிவு செய்யப்படுகின்றன.

VG இன் கணக்கீட்டின்படி, பதிவுசெய்யப்பட்ட நோய்த்தொற்றின் போக்கு அதிகரித்து வருகிறது. 58 நகராட்சிகளில் தொற்று அதிகரித்து வரும் போக்கு உள்ளது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நோர்வேயில் மொத்தம் 140,836 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒஸ்லோவில், ஞாயிற்றுக்கிழமை 72 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டன. சனிக்கிழமை தொற்றின் எண்ணிக்கை 80 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments