நோர்வேயிலும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ்!

நோர்வேயிலும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ்!

பிரித்தானியாவில் அவதானிக்கப்பட்ட, பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ், நோர்வேயிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக நோர்வே சுகாதார அமைப்பு (FHI), 27.12.2020 அன்று அவசர அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவிலிருந்து விமானமூலம் நோர்வே வந்தடைந்த இருவருக்கு இவ்வைரஸ் அவதானிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, சுவீடன், அவுஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட பல இடங்களில் அவதானிக்கப்பட்ட, மிக வேகமாக பரவும் வீரியம் கொண்ட, பிறழ்வடைந்த இவ்வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள