நோர்வேயில் அதிகமாக குழந்தைகளை தாக்கும் கொரோனா!

நோர்வேயில் அதிகமாக குழந்தைகளை தாக்கும் கொரோனா!

நோர்வேயில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 0- 7அகவையுடைய குழந்தைகள் தற்போதைய தொற்றுப்பட்டியலில் முதலாவதாக இடம்பிடித்துள்ளார்கள்.

ஆனாலும் சிறுவர் பாடசாலைகள் தொடர்ச்சியாக சிவப்பு எச்சரிக்கையில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று ஒஸ்லோவில் 403 தொற்றாளர்களும் நோர்வே முழுவதும் 1064 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதேவேளை 4 வாரங்களுக்குள் 620 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே விடுமுறைக்கு தாங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் நோர்வே சுகாதாரப்பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள