நோர்வேயில் அதிகமான மாணவர்களின் கொண்டாட்டங்கள் ரத்து!

நோர்வேயில் அதிகமான மாணவர்களின் கொண்டாட்டங்கள் ரத்து!

கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் நோர்வேயில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடிகொண்டாடும் வழிகாட்டி வாரக்கொண்டாட்டங்கள்(fedderuken) துரோம்சோவில்(Tromsø) கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் தங்களின் உத்தியோகபூர்வ தளங்களில் அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வானது மாணவர்களால் வெளிப்பூங்காவில் ஒழுங்கமைக்கப்பட்டு நூற்றுக்கணக்காக கூடி மகிழ்ச்சியில் திளைப்பது வழமை ஆனாலும் கொரோனா தொற்றை குறைப்பதற்காக பெரும்பாலான நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு சில நிகழ்வுகள் காலைவேளையில் 20 பேரோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதைவேளை இப்படியான கொண்டாட்ட குழு உறுப்பினருக்கு துரோன்கைம்(Trondheim) நகரில் கொரோனா தொற்றியதை அடுத்து அங்கும் கூடுதலான நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று førde என்ற இடத்திலும் மதுபான கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments