நோர்வேயில் அதிவேகமாக பரவும் “கொரோனா”! கவலை கொள்ளும் நோர்வே பிரதமர்!!

You are currently viewing நோர்வேயில் அதிவேகமாக பரவும் “கொரோனா”! கவலை கொள்ளும் நோர்வே பிரதமர்!!

“கொரோனா” இரண்டாவது அலை, நோர்வேயில் அதிவேகமாக பரவிவரும் நிலையையிட்டு தான் கவலை கொள்வதாக பிரதமர் “Erna Solberg” அம்மையார் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலையில் அவதானிக்கப்பட்டுள்ள “கொரோனா” வைரசுவின் வீரியம் குறைவாக இருந்தாலும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வேகமாக அதிகரித்து வருவதால் சுகாதார நிலைமைகள் படு மோசமான நிலைக்கு செல்வதோடு, பிரதான எதிர்வினையாக நாட்டின் பொருளாதார உறுதித்தன்மையில் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய அளவில் மிகக்குறைந்த பாதிப்புக்கள் காணப்படும் நாடுகளில் நோர்வே உள்ளடங்கினாலும், நாளுக்குநாள் மோசமாகிவரும் நிலைமைகள் காரணமாக, அடுத்த வாரத்திலிருந்து மிக இறுக்கமான “கொரோனா” தடுப்பு நடைமுறைகளை அரசு அறிவிக்க இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் அதிவேகமாக பரவும்
நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார்!

“கொரோனா” பரவலை தடுப்பதற்காக தற்போதுள்ள பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை மிகக்கடுமையாக கடைப்பிடிக்குமாறு ஒவ்வொரு நாட்டுமக்களிடமும் வேண்டிக்கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதமர், முழு வீச்சில் தொற்று பரவும் நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட விட்டால், நாடு மோசமான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் எச்சரித்துள்ளதோடு, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பெரு தொற்று சிக்கல் எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த வாரத்த்திலிருந்து இன்னும் இறுக்கமான நடைமுறைகள் அமுலாக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால ஒப்பந்தங்களோடு தொழில்வாய்ப்புக்களுக்காக நோர்வேக்குள் வரும் வெளிநாட்டவர்களாலும் “கொரோனா” தொற்று நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதும், இவ்வாறு நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள் “கொரோனா” தடுப்பு பரிந்துரைகளை கணக்கெடுக்காது, ஒருவரோடொருவர் மிக நெருக்கமாக தங்கியிருப்பதால் தொற்று வேகமாக பரவுவது பெரும் பிரச்சனைகளாக இருப்பதனால், இவர்களுக்கான நடைமுறைகளிலும் இறுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தி மேம்பாடு:

இறுதியாக வந்த செய்திகளின்படி, முக / வாய்க்கவசங்களின் பாவனை அதிகரிக்கப்படுவதோடு, பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை கணிசமாக குறைக்கும் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டுமென, நிலைமையை உன்னிப்பாக அவதானித்து பவருபவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

எனினும், ஏனைய நாடுகளைப்போல் முடக்க நிலையொன்றை அறிவிக்கும் நிலைப்பாடை அரசு எடுக்குமா என்பது திடமாக சொல்லமுடியாதுள்ள நிலைமையும் காணப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள