ஈழ மயில் 2026

தாயகப் பாடல்களிற்கான மாபெரும் தனிநடனப் போட்டி தாயகத்தின் மண்வாசனையும், தேசிய உணர்வும், தமிழர் கலைப்பண்பாட்டின் பெருமையும் ஒன்றிணையும் மேடை .
தமிழர் பாரம்பரியத்தையும், தாயகப் பாடல்கள் மூலமான விடுதலை வேட்கையையும், எமது வீர வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் வருடாந்தம் நடைபெறும் சிறப்பு நடனப் போட்டி.
சிறுவர் , இளையோர், பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
* பாடல் விதிமுறைகள்
பாடல்கள் அனைத்தும் தாயகப் பாடல்கள் ஆக அமைய வேண்டும்.
* அனைத்துலக அனுமதி பெற்ற பாடல்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* முதல் கட்டம் – வீடியோ பதிவு
போட்டியாளர்கள் தங்களது தனி நடன வீடியோவை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பெறப்பட்ட வீடியோக்கள்
இளம் ஆசிரியர்கள்
ஆசிரியர் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற நடன இளையோர்கள்
மூலம் மதிப்பாய்வு செய்யப்படும்.
* இறுதிச்சுற்று 13/06 அல்லது 14/06
மேடையுடன் கூடிய மண்டபத்தில் நேரடியாக நடைபெறும்.
🎁பதிவுக்கட்டனம் 200kr .
தமிழ் மகளிர் அமைப்பு நோர்வேயினால் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன்
இந்த நடனப்போட்டி நிகழ்வு நடைபெறும்.
உங்கள் நடனத்தின் மூலம் தாயகத்தின் ஈழ ஒளியை பிரகாசிக்க வைப்பதுடன்
உங்கள் திறமையையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம்.






