நோர்வேயில் எகிறிப்பாயும் கொரோனா!

நோர்வேயில் எகிறிப்பாயும் கொரோனா!

நோர்வேயில் கடந்த 24 மணத்தியாலங்களில் 610 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதேவேளை ஒஸ்லோவில் மட்டும் 155 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.


அதேவேளை ஒஸ்லோவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக காவல்த்துறைக்கு 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும் மற்றயது வெளிநாட்டில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தலை மீறியதாகவும் காவல்த்துறை தெரிவித்துள்ளது.

மேலும் காவல்த்துறை தெரிவிக்கையில் கொரோனா விதிமுறைகளை மீறுவோர் தண்டப்பணமும் சிறைத்தண்டனையும் நிச்சயம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமெனவும் அறிவித்துள்ளனர்.


இதேபோன்று
பேர்கனிலும் விதிமுறைகளை மீறிய 5 பேருக்கு மேற்பட்டோர் கூடிய 2 கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகவும் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் கவல்த்துறை தெரிவித்துள்ளது .

4.5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments