நோர்வேயில் ஏழாவது மரணம் பதிவு! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வேயில் ஏழாவது மரணம் பதிவு! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயில் “கொரோனா” தாக்கத்தால் ஏழாவது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் ஒஸ்லோவில் உள்ள மூதாளர் பராமரிப்பு நிலையமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த மூதாளரொருவர், கடந்த வார இறுதியில் “கொரோனா” வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்ததிருந்த நிலையில் இன்று அவர் மரணடைந்துள்ளார்.

ஒஸ்லோவிலுள்ள அனைத்து மூதாளர் பராமரிப்பு நிலையங்களை விடவும் அதிகளவில் 163 மூதாளர்கள் பராமரிக்கப்பட்டுவரும் மேற்படி நிலையத்தில் ஏற்பட்டுள்ள இம்மரணத்தால், அங்கு வசிக்கும் ஏனைய மூதாளர்கள் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள