நோர்வேயில் கொரோனா ; இன்றைய கண்ணோட்டம்!

நோர்வேயில் கொரோனா ; இன்றைய கண்ணோட்டம்!

தற்போதைய தரவுகளின்படி, நோர்வே மருத்துவமனைகளில் இப்போது 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைவிட ஒருவர் குறைவாகும். இன்றைய நாள் நிறைவில் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், நேற்றையதைப் போலவே 11 பேர் தொடர்ந்தும் சுவாசச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் பெரிதாக மாற்றம் எதுவுமில்லை. கடந்த மார்ச் 16 ம் திகதி 10 பேர் சுவாச சிகிச்சை பெற்றிருந்தனர்.

மருத்துவமனைகளில் இன்று இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை. நோர்வேயில் இதுவரை மொத்தம் 233 பேர் கொரோனா தோற்றால் இறந்துள்ளனர்.

தொற்று நோய் அறிக்கையிடல் அமைப் பின் (MSIS) புள்ளிவிவரங்களின்படி, நள்ளிரவுவரை 8,257 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments