நோர்வேயில் கொரோனா ; மருத்துவமனை நோயாளிகள் எண்ணிக்கையில் குறைவு!

நோர்வேயில் கொரோனா ; மருத்துவமனை நோயாளிகள் எண்ணிக்கையில் குறைவு!

VG யின் கணக்கெடுப்பின்படி இப்பொழுது, நோர்வே மருத்துவமனைகளில் கொரோனா தோற்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 35 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது நால்வர் குறைவாகும். இன்றைய நாள் நிறைவில் இந்த எண்ணிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்!

  • அதேபோல், அவசர சிகிட்ச்சைப் பிரிவில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 8 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 10ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இருவர் குறைவாகும்.
  • மேலும் சுவாசக்கருவி பயன்பாட்டில் இருப்பவர் எண்ணிக்கை தற்போது 5 ஆகவுள்ளது. இந்த எண்ணிக்கையானது நேற்றைய தினம் 8 ஆக இருந்துள்ளது. இது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது மூவர் குறைவாகும்.
  • இன்று இதுவரை புதிதாக நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே நோர்வேயில் இதுவரை பாதிக்கப்படடவர்கள் எண்ணிக்கை 8411 ஆக உயர்ந்துள்ளது.
  • இன்றைய புள்ளிவிபரங்களின்படி நோர்வேயில் இதுவரை 245,352 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை நோர்வேயில் மொத்தம் 236 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்

தரவுகள்: VG

3 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments