நோர்வேயில் கொரோனா : மே.17 கொண்டாட்டம் ரத்து!

நோர்வேயில் கொரோனா : மே.17 கொண்டாட்டம் ரத்து!

கொரோனா தொற்று நோயின் விளைவாக, Vestfold og Telemark இலுள்ள Porsgrunn நகராட்சி இந்த ஆண்டு மே 17 கொண்டாட்டத்தை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

இந்த ஆண்டு தேசிய கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்த முதல் நகராட்சி Porsgrunn ஆகும்.

தற்போதைய நிலைமை, மற்றும் எதிர்வரும் நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களினால் , மே 17 அன்று, நகர மையத்தில் தேசிய கொண்டாட்டத்தை கொண்டாடுவதை ரத்து செய்யும் முடிவு, மே 17 ஒழுங்கமைப்பு குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த நேரத்தில் அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலும், உள் முற்றம் மற்றும் புற பகுதிகளிலும், மே 17 கொண்டாட்டத்தை அடையாளப் படுத்தலாம் என மே 17 ஒழுங்கமைப்பு குழு கூறியுள்ளது’

மேலதிக தகவல்: Dagbladet , Porsgrunn Kommune

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments